9#28a. கேள்விக் கணைகள் (1)

“கர்மம் என்றால் என்ன? எதனால் தோன்றுகிறது?
கர்மத்துக்கு ஹேது ஏது? தேஹம் பெறுவது ஏன்?

தியானம் என்றால் என்ன? புத்தி என்பது எது?
பிராணன், இந்திரியங்களின் தன்மை என்ன?

தேவதைகள் யார்? உணவூட்டுபவர் யார்?
போகம் என்பது என்ன? உண்பவர் யார்?

ஜீவன், பரமாத்மா பிராயச்சித்தம் இவற்றை
விளக்க வேண்டும் நீரே எனக்கு!” என்றாள்.

“வேதங்கள் விதிக்கின்றன சுப கர்மங்களை!
வேதங்கள் விலக்குகின்றன அசுப கர்மங்களை!

சங்கற்பமற்ற பூஜை அழிக்கும் கர்மத்தை!
சங்கற்பமற்ற பூஜை அளிக்கும் பக்தியை !

பக்தியுடையவன் அடைவதில்லை கர்ம பலனை;
பக்தியுடையவனுக்கு இல்லை சம்சார பந்தங்கள்.

பிரம்ம பக்தி கொண்டவனுக்கு இல்லை
பிறப்பு, இறப்பு, மூப்பு, பிணிகள், அச்சம்.

ஜீவன் முக்தர்கள் என்று வேதங்கள் புகழும்
ஜீவர்கள் இந்த வகையைச் சார்ந்தவர்களே!

இரண்டு வகைப்படும் பக்தி அறிவாய் பெண்ணே!
நிர்வாண பக்தி என்றும் விஷ்ணுரூப பக்தி என்றும்.

நாடுகின்றனர் உருவ பக்தியை வைஷ்ணவர்கள்
நாடுகின்றனர் நிர்வாண பக்தியை ஞானியர்கள்

கர்ம ரூபிணி ஆகின்றாள் பிரகிருதிதேவி – அவள்
கர்ம ரூபமாகிய சூத்திரக் கயிறுகளை அசைப்பதால்.

அளிக்கின்றாள் நம் கர்மங்களுக்கு ஏற்ப உடல்களை!
அளிக்கின்றாள் கர்மங்களுக்கு ஏற்ப அனுபவங்களை!”

உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K. ராமன்

9#28a. The rain of questions!

SAvitri asked Yama Dharma a series of questions and doubts now! “What is karma? How does it come into existence? What causes the karmas? Why do we get a body?
What is meant by DhyAnam? What is the buddhi? What is the true nature of prANA and the indriyAs?

Who are the Gods and Devas? Who gives the food? Who eats the food? What is the enjoyment? Who is a JeevA? Who is the ParamAtmA? What is prAyachitham? You must please explain all these to me!”

Yama Dhrma replied thus:” Vedas lay down the good karmas and Vedas prohibit the bad karmAs. Any worship done without seeking any fruit or any result will not bind a person in karma. Such a worship devoid of any sankalpam actually destroys karmA and bestows true devotion.

A devotee does not suffer the effects of his karmas. A devotee does not suffer from samsAra bandham or worldly bondage. A real devotee is fearless and does not undergo the chain of birth, growth, oldage, diseases and death. He is the jeevan mukta as defined in the Vedas.

Bhakti is of two types namely NirvANa bhakti and VishNu bhakti. The VaishNavAs prefer the worship with form while the JnAnis prefer the worship without forms.

Prakriti Devi is the KarmaroopiNi – since she pulls the strings of karma and manipulates the jeevAs. She gives every jeeva a body according to his karmas. She makes the Jeeva undergo experiences depending on the karmas of the Jeeva.”