9#11. தேவி கங்கை

சூரிய வம்ச சகரனுக்கு இரு மனைவியர்;
பிறந்தான் அசமஞ்சன் ஒரு மனைவிக்கு.

அறுபதினாயிரம் மகன்கள் மற்ற மனைவிக்கு;
எரிந்து சாம்பலாயினர் கபிலரின் சாபத்தால்!

கடைதேற்ற கொண்டு வர வேண்டும் தவத்தினால்
கங்கையை விண்ணுலகிலிருந்து மண்ணுலகுக்கு!

தவம் செய்தான் அசமஞ்சன் லக்ஷம் ஆண்டுகள்;
தவம் செய்தான் அம்சுமான் லக்ஷம் ஆண்டுகள்;

ஆகாச கங்கையை பூமிக்குக் கொண்டு வருவதற்கு
அருந்தவம் செய்தான் பகீரதன் லக்ஷம் ஆண்டுகள்;

பகீரதன் தவம் பலித்து விட்டது – ஆகாச கங்கை
பாகீரதியாக இறங்கினாள் நதியுருவில் பூமிக்கு.

தரிசனமே நீக்கிவிடும் பாவங்களை என்றால்
ஸ்பரிசம் தரும் பத்து மடங்கு புண்ணியத்தை.

புண்ணிய தினங்களில் நாம் கங்கா ஸ்நானம்
பண்ணியதின் பலனைச் சொல்வதும் அரிது!

சந்திர கிரஹண ஸ்நானம் கோடிப் புண்ணியம்;
சூரிய கிரஹண ஸ்நானம் பத்து மடங்கு அதிகம்!

நதியுருவத்தில் அடைவாள் லவண சமுத்திரத்தை;
அதுவும் ஆகும் மஹா விஷ்ணுவின் ஓர் அம்சம்.

ஓடி வருகின்றாள் கங்கை நதியாகி பாரதத்தில்;
கூடி மகிழ்கின்றாள் தினமும் சமுத்திர ராஜனை.

ஆராதிக்க வேண்டும் வினாயகரை விக்னங்கள் நீங்கிட;
ஆராதிக்க வேண்டும் சூரியனை ஆரோக்கியம் பெற்றிட;

ஆராதிக்க வேண்டும் அக்னியைத் தூய்மை பெற்றிட;
ஆராதிக்க வேண்டும் விஷ்ணுவை சம்பத்துப் பெற்றிட;

ஆராதிக்க வேண்டும் பரமசிவனை ஞான பெற்றிட;
ஆராதிக்க வேண்டும் தேவியை மோக்ஷம் பெற்றிட!

உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K. ராமன்

9#11. Ganga Devi

Sagara, a king of Soorya vamsa had two wives. One of them has a son called Asamanjan and the other wife gave birth to sixty thousand sons. All the sons save Asamanjan got burned down to ash due to the curse of Kapila Muni.

Ganga had to be brought down from heaven to earth to liberate the sixty thousand dead princes. Asamanjan took up penance for one laksh years and died before his aim was realized.

His son AmsumAn took up penance for one lakh years with out any success. His son Bhageerata took up penance and his attempt was successful. Ganga Devi descended from the heaven to the earth in the form of a river.

The darshan of River Ganga gives a person good merits. Her touch purifies by removing all the sins. The holy dip taken on auspicious days add to our merits and removes our sins.

Ganges runs through several cities in BhArata Varsha and unites with the salty sea which is also an amsam of MahA VishNu.

Praying to VinAyaka removes all our obstacles. Praying to Sun God bestows good health on us. Praying to Agni gives us purity. Praying to Vishnu gives us wealth. Praying to Siva gives us Knowledge and praying to Devi gives us total Liberation.