9#7c. பக்தர்கள் பெருமை

“மறைந்துள்ளது வேதங்களில் பக்தர் குறிப்பு – இது
மறைந்து இருக்க வேண்டும் ரஹசியமாகவே!

அடையக் கூடாது இது துர்மார்க்கர் செவிகளை;
உடையக் கூடாது இந்தப் பரம வேத ரஹசியம்.

சத் புருஷன் ஆகிவிடுவான் ஓருவன் – செவிகளில்
உத்தமமான மந்திரம் குருமுகமாக விழும் போது.

குலம், கோத்திரம் எதுவாக இருந்த போதிலும்
நலம் பெறும் நூறு தலைமுறை பக்தியினால்!

பக்தியுடன் திகழும் எந்தப் பிறவியும் – ஜீவன்
முக்தி அடையும்; சென்று சேரும் பரமபதம்.

தேவன் ஆவான் தூய பக்தன் ஒவ்வொருவனும்;
தேவை இல்லை அவனுக்கு சுவர்க்க போகங்கள்.

உள்ளனர் பல நல்ல பக்தர்கள் பாரத வர்ஷத்தில்;
கள்ளமில்லா இதயத்துடன் வருகின்றனர் வலம்.

தூய்மைப் படுத்துவர் தாம் வாழும் இடங்களை;
தூய முக்தி பெறுவார் வாழ்ந்து முடிந்த பின்னர்!”

விளக்கினார் மூன்று தேவியருக்கும் விஷ்ணு;
விலகினர் தேவியர் கடமையை நிறைவேற்றிட.

உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K. ராமன்

9#7c. The greatness of bhaktAs.

“The marks of the great Bhaktas are all mentioned secretly in Vedas and PurANas. They sanctify, destroy sins, give happiness, devotion and the final liberation. They are never to be disclosed to deceitful persons but to be kept hidden from them always!

All the Vedas declare him to be holy – in whose ears the mantras are pronounced by his Guru. One hundred previous generations of my true Bhkata become liberated at once and reach my highest abode.

My Bhakta is full of devotion to Me. He always repeats My glories and performs actions according to My directions. He listens with all his heart to My leelAs and on hearing these he dances with ecstasy.

His voice gets choked with emotion, tears flow incessantly from his eyes, and he loses consciousness of the external world. My Bhaktas do not long for happiness nor for liberation nor for immortality! They just want to do service to Me and they are solely intent on doing this alone.

My Bhaktas roam in BhArata Varsha – eager to listen to My glories and happy to recite them to the others. They purify the world and ultimately reach My abode, the best among all sacred places.”

Then the three Devis GangA, Saraswati and Lakshmi went away to obey the orders of Sri Hari – who went back to His own abode.