9#12b. கங்கையின் துதி (2)

“புண்ணியத்தைப் பெருக்குபவளுக்கு – சிவனின்
இன்னிசையை மோஹிப்பவளுக்கு நமஸ்காரம்!

ராதா, கிருஷ்ணர் தேஹத்தில் தோன்றியவளுக்கு;
கார்த்திகைப் பௌர்ணமியில் தோன்றியவளுக்கு;

கோலோகத்தைச் சூழ்ந்து இருப்பவளுக்கு;
வைகுண்டத்தில் வியாபித்து இருப்பவளுக்கு;

பிரம்ம லோகத்திலும், சிவ லோகத்திலும்;
சூரிய மண்டலத்திலும், சந்திர மண்டலத்திலும்;

தபோ லோகதிலும், ஜனர் லோகத்திலும்;
மகர் லோகத்திலும், கைலாயத்திலும்;

இந்திர லோகத்திலும், பாதளத்திலும் பாயும்
கங்கையே உனக்கு நமஸ்காரம்! நமஸ்காரம்!

கிருத யுகத்தில் கொண்டாய் பால் வர்ணம்;
திரேதா யுகத்தில் நிறம் சந்திரனின் வர்ணம்;

துவாபர யுகத்தில் சந்தன வர்ணம் கொண்டாய்;
கலி யுகத்தில் தண்ணீரின் வர்ணம் கொண்டாய்;

சுவர்க்கத்தில் பால் வண்ணம் கொண்டாய்-தேவி
உனக்கு நமஸ்காரம், நமஸ்காரம், நமஸ்காரம்.”

உள்ளன இருபத்தோரு ஸ்லோகங்கள் – இவற்றை
உள்ளன்போடு துதித்தால் அஸ்வமேத யாக பலன்!

நல்ல குடும்பமும், நல்ல புகழும் அடைவர்;
நல்ல குணம் பெறுவர் நோய் வாய்ப்பட்டவர்.

விடுதலை அடைவான் கட்டுப் பட்டவன்;
மூடனும், மூர்க்கனும் அறிஞர்கள் ஆவர்.

இறங்கிய கங்கை பாய்ந்தாள் – சகரர்கள்
இறந்து கிடந்த இடத்துக்குப் பரிவுடன்.

பரம பதம் அடைந்தனர் சகரர் மகன்கள்
அறுபதினாயிரம் பேர்களும் உடனேயே!

பகீரதப் பிரயத்தினத்தால் இறங்கிய கங்கை
பாகீரதி என்ற பெயர் பெற்று விளங்கினாள்!

உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K. ராமன்

9#12b. GangA Devi Stuti (2)

“I bow down to the Ganges who appeared from the body of Sri. KrishnA – enchanted by the music of SivA and bathed with the perspiration of RAdhA Devi.

I bow down to GangA Devi who first appeared in the RAsa MaNdalam – in the region of Goloka – and who always remains with Lord Sankara.

My obeisance to the Devi GangA who first appeared on the Full Moon night of the month of KArtik.

My obeisance to GangA Devi who flows through Goloka, Vaikuntha, Brahmaloka, Sivaloka, Soorya MaNdala, Chandra Mandala, Tapo loka, Janar loka, Mahar lokA, and Kailash. She flows as MandAkini in Indraloka, as Bhogavati PAtAlA and as AlakAnanda on the earth.

I bow down to GangA Devi who was of the color of milk in Satya yuga; of the color of Moon in TretA Yuga, of the color of white sandal-paste in DvApara yuga. I bow down to GangA Devi who is as plain water in Kali yuga in this earth and as pure milk in The Heaven.

By the touch of a drop of Ganges, all the horrible sins incurred in ten million births will get burnt to ashes. The twenty-one verses this great stotra in praise of Devi Ganga destroy the sins and add to the merits of one who chants them regularly.

He who has no sons will get good sons and he who has no wife will get a good wife. People will get cured of their diseases. The man who is under bondage, will be liberated. This stotra bestows wisdom and intelligence on the person who chants it with devotion.