9#26b. சாவித்திரி துதி

“சச்சிதானந்த ரூபிணி! மூலப் பிரகிருதி வடிவே!
ஹிரண்ய கர்ப்ப ரூபிணி! பிரசன்னமாகுவாய்!

வேத ஸ்வரூபிணி! பரமானந்த ரூபிணி!
தேவி நீ நித்யை! நித்ய புருஷனின் பத்தினி!

நித்யானந்த ஸ்வரூபிணி! பிரம்மஜாதி ஸ்வரூபிணி!
நிகர்த்தவள் நீ ஒளிர்ந்து சுடரை உமிழும் அக்னிக்கு!

மந்திர ரூபிணி நீ! பராத்பரை நீ! காட்சி தா!
மோக்ஷமும், தேஜசும் தருபவளே காட்சி தா!

பஸ்பமாகிவிடும் மனோ, வாக், காயங்களின்
பாவங்கள் உன் பெயரை உச்சரித்தவுடனேயே!”

கோலோகத்தில் கிருஷ்ணன் பிரம்மனுக்குத் தர
குதூஹலத்துடன் உச்சரித்தான் பிரம்ம தேவன்.

பிரம்ம லோகத்தை அடைந்தாள் சாவித்திரி;
பிரம்மனின் மனைவியாக வாழ்கின்றாள் அங்கே.

துதித்தான் அஸ்வபதி இந்த மந்திரத்தை;
மதித்தாள் அவன் துதியை சாவித்திரி தேவி.

சந்தியா வந்தனத்துக்குப் பின் இதை ஓதினால்
வந்து சேரும் நான்கு வேதபாராயண பலன்கள்.

உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K. ராமன்

9#26b. SAVITRI DEVI STUTI

“You are the everlasting existence, everlasting intelligence and everlasting bliss! You are the Moolaprakriti! You are the HiraNya Garbha! You get pleased!

You are of the nature of Fire and Energy! You are the Highest! You are the Highest Bliss! You belong to the caste of the twice-born. Do become appeased!

You are eternal! You are dear to the Eternal! You are of the nature of the Everlasting Bliss. O Devi! You, the all auspicious One! Please become satisfied.

Thou art present in everything and everyone! You are the essence of all mantras of the BrAhmaNas! You are higher than the highest! You are the bestower of happiness and the liberation! O Devi! Please become pleased.

You are like the burning flame to the fuel of sins of the BrAhmaNas! You bestow the BrahmA teja (the brilliance of BrahmA)! O Devi! Please become appeased.

All the sins committed by me through my body, my mind and my speech are burnt to ashes – just be remembering your holy name.”

Thus saying, the Creator of the world reached the assembly there. Then SAvitri came to the Brahmaloka with BrahmA. The King Aswapati chanted this stotra to SAvitri. She gave him her darshan and all the boons desired by the king.

Whosoever recites this highly sacred king of Stotras after SandhyA Vandanam, quickly acquires the fruits of studying all the four Vedas.