9#2b. வைஷ்ணவர்கள் கருத்து

தேஜோ மண்டலத்தில் உள்ளது – பிரம்ம
தேஜஸ் உள்ள ஓர் உன்னதமான வஸ்து.

இயங்கிகிறது அது முழு சுதந்திரத்துடன்;
இயங்குகிறது முற்றிலும் தன்னிச்சையாக!

அனைத்து உருவங்களுக்கும் காரணம் இதுவே!
அனைத்து நிகழ்வுகளுக்கும் காரணம் இதுவே!

கவருகின்ற அழகிய உருவம் கொண்டது இது!
கபடம், சூது, வாது இல்லாக் குழவி போன்றது!

நீருண்ட கார்மேகத்தின் வர்ணம் கொண்டது;
மலர்ந்த தாமரை இதழ்க் கண்கள் கொண்டது!

முத்துப் பல் வரிசைகள் இரண்டு கொண்டது
முல்லை, பீலி மின்னும் கேசம் கொண்டது.

நேராக, உயர்ந்து, நீண்ட நாசியை உடையது;
நேசர்களுக்கு அருளும் புன்னகை உடையது!

அணியும் உருக்கிய பொன்னிற ஆடையை;
அமையும் அழகிய கரத்தில் புல்லாங்குழல்.

ஜொலிக்கும் ரத்தினம் இழைத்த ஆபரணம்!
ஜெயிக்கும் காண்பவரைப் பட்டு பீதாம்பரம்!

ஆதாரம் அனைத்து உலகங்களுக்கும் இதுவே!
ஆதாரம் அனைவரின் சக்தி, பராக்கிரமத்துக்கு!

நித்தியமான பரம்பொருள் என்பதுவும் இதுவே.
சித்தியாக, சித்தேசமாக, சித்திகாரமானது இதுவே.

அகற்றும் ஜனன, மரண, வியாதி பயங்களை
அகண்ட பரிபூரண சச்சிதானந்தமயமான இது!

பரம்பொருள், பரமாத்மா, பரப்பிரம்மம் போன்ற
பெயர்களில் அறியப்படும் ஸ்ரீ கிருஷ்ண மூர்த்தி.

‘கிருஷ்’ என்பது சிறந்த பரப்பிரம்ம பக்தி பாவம்;
‘ண’ என்பது சரணாகதி அடைந்த தாஸ பாவம்.

‘கிருஷ்ண’ என்பது வழங்கும் இவ்விரண்டையும்;
‘கிருஷ்ண’ என்பது இனிக்கும் கேட்கும் செவிகளில்.

உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K. ராமன்

9#2b. The Vaishnava concept

From where can fire, strength and energy come without a fiery, strong, energetic Person emitting them from behind?

He who shines in the center of this fiery sphere is the Para Brahmam; He is the Fiery Person; He is higher than the Highest; He has All Free Will; He is in All the Forms; He is the Cause of all causes and His Form is Very Beautiful.

He is Young; He looks very peaceful and He is loved by all. He is the Highest; His Blue Body shines like new rain-clouds. His two eyes put to shame the autumn lotuses during mid-day; His exquisite rows of teeth are like two rows of perfect pearls!

The peacock feather on His crown; the MAlati flower garland on His neck. His exceedingly beautiful straight nose; the sweet smile on His lips enchant everyone. There is none like Him in showing favor to the Bhaktas.

He wears yellow silk in the color of molten gold and a flute is seen on His hands. His body is decorated with gem-studded jewels. He is the Sole Refuge of this whole Universe; He is omnipotent and omnipresent.

He is Himself a Siddha Purusha and bestows Siddhis on the others. He removes the fears of birth, death, old age, illness and sorrows. The life span of Brahma is just a twinkling of His eye.

The word ‘Krish’ denotes Bhakti and the letter ‘Na’ signifies devotion to His service. So He is the one who Bestows Bhakti and devotion to His service.

Again ‘Krish’ denotes everything and ‘Na’ signifies the root. So it is He Who is the Root and the Creator of everything here.