9#12c. ராதா மகோத்சவம்

ராதா மகோத்சவம் கார்த்திகை பௌர்ணமியன்று!
ராதையைப் பூஜித்தனர் தேவர்கள், முனிவர்கள்.

இனிய பாடல் பாடினாள் வீணை இசையுடன் வாணி;
இனிமையில் மயங்கியவர்கள் தந்தனர் பல பரிசுகள்.

ரத்தின ஹாரத்தை அளித்தான் பிரம்மதேவன்;
ருத்திரன் அளித்தான் அபூர்வ மணிமாலையை.

அளித்தார் கிருஷ்ணர் கௌஸ்துப மணியை;
அளித்தாள் லக்ஷ்மி ரத்தினக் காதோலையை!

அளித்தனர் மூலப் பிரகிருதிகள் பிரம்மசக்தி;
அளித்தனர் மூலப் பிரகிருதிகள் தர்மயுக்தி.

அளித்தான் யமதர்மன் அளவில்லாத புகழை.
அளித்தான் வாயுதேவன் அழகிய நூபுரத்தை!

பாடினார் ருத்திரர் மிகவும் இனிமையாக;
பாட்டைக் கேட்டவர் விழுந்தனர் மயங்கி.

கண் விழித்துப் பார்த்தால் ராதா கிருஷ்ணரைக்
காணவில்லை எங்கெங்கோ தேடிய போதிலும்.

ஜல மயமாக இருந்தது எங்கும் – அறிந்தான்
ஜல மயமான காரணத்தை பிரமன் ஆராய்ந்து.

விரும்பினர் அனைவரும் கிருஷ்ணனைக் காண!
விரும்பினர் அனைவரும் ராதா தேவியைக் காண!

“உருவங்களைக் காட்ட வேண்டும் என்றால் – ஒரு
உறுதிமொழி அளிக்க வேண்டும் சிவன் எனக்கு!

தேவ சபையில் விஷ்ணு மாயையுடன் கூட
தியான ஸ்லோகங்கள், அபூர்வ மந்திரங்கள்,

கவசங்கள், பூஜை முறைகள், சாஸ்திரங்கள்,
வேதாந்தம், வேதசாரம் சிருஷ்டித்து அவற்றை

குருவாக இருந்து காத்து வருவதாக உறுதிமொழி!”
கூறியது அசரீரி அனைவரும் கேட்கும் வண்ணம்.

செய்தார் பிரதிக்ஞை சிவபெருமான் அவ்வாறே;
செய்தார் பிரதிக்ஞை கையில் கங்கை நீருடன்.

தோன்றினர் கிருஷ்ணரும், ராதையும் மீண்டும்!
தொடர்ந்து நடந்தது மகோத்சவம் முன்போலவே!

முக்தி தீபம் என்ற அபூர்வ ரஹசிய நூலை
முக்தி நாதன் சிவன் அளித்தான் உலகுக்கு.

உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K. ராமன்

9#12c. RAdhA MahOtsavam

On the Full Moon night of the month of KArtik, RAdhA Mahotsavam – a great festivity in honor of RAdhA – was celebrated. Devi Saraswati began to sing lovely songs, in tune with her veenA, on KrishnA. All were pleased with her divine music!

BrahmA presented to Saraswati a necklace of gems; MahA Deva gave her very rare gems and jewels of this universe; KrishNa presented her with his Kaustubha jewel and RAdhikA gave an invaluable necklace of gems.

NArAyaNa presented to her a hAram of jewels; Lakshmi gave Saraswati her golden earrings studded with precious gems. Moola Prakruti Devi gave her undiminished devotion to BrahmA. Dharma gave her fame; Agni gave her excellent raiment purified by fire and VAyu gave Her Noopura.

Mahes’vara began to sing, at suggested by BrahmA, songs relating to the grand RAsa festival. Listening to this, the Devas became enchanted and remained like statues. With great difficulty, they regained their consciousness.

Then they saw that RAdhA and KrishnA were missing and everything was deluged with water. The Gopas, Gopis, Devas BrahmaNAs began to cry loudly.

BrahmA came to know that RAdhA and Krishna have assumed this liquid form as the water of Ganges for the deliverance of the people of the world. BrahmA and the others prayed to Krishna, “Please show us your form and grant us boons.”

An asareeri spoke these words loud and clear!

“O Devas! If you desire to see My Form, then request Lord Mahesvara to carry out My wish. He must compose the beautiful Tantra SAstra, in accordance with the limbs of the Vedas.

That SAstra must be full of Mantras (capable yielding the desired fruits), Stotras (hymns) and Kavachas (protection mantras) and rules of worship in the proper order. If MahA Deva promises earnestly in this assembly of the Devas, I will then exhibit My True Form.”

Siva took the Ganges water in His hands and swore saying, “I will complete the Tantra S’astra, full of RAdhA mantras and it will not be opposed to the Vedas.”

When BhagavAn Sankara said this before the assembly of the Devas in the region of Goloka, KrishNa reappeared there with RAdhA. The Devas became very happy to see them.

They praised them and the RAsa Festiva continued. MahA Deva lighted the Torch of Mukti, by formulating the Tantra SAstra as promised by him.

Thus the holy GangA was born out of the bodies of RAdhA and Krishna. She is equally honored everywhere in this Universe as a purifier and liberator of the jeevAs.