9#1a. பஞ்ச சக்திகள்

நாராயணன் கூறினான் நாரத முனிவனிடம்
“நாம் வணங்கும் பஞ்சசக்திகள் இவர் ஐவர்.

துர்கா தேவி, ராதா தேவி, லக்ஷ்மி தேவி,
சரஸ்வதி தேவி, சாவித்திரி தேவி என்பவர்!”

நாரதன் வினவினான் நாராயணனிடம்,
“கூறுவீர் அவர்கள் யார் யார் என்பதை!

கூறுவீர்கள் அவர்கள் இலக்கணத்தையும்,
யாரால் உண்டாக்கப் பட்டவர்கள் என்றும்!

எதனால் பஞ்ச சக்தியர் என்ற பெயர்?
என்ன சிறப்பு பஞ்ச பிரகிருதிகளுக்கு?

வரலாற்றைக் கூறுங்கள் சக்தியர் பற்றி!
வழிபடும் முறைகளையும் கூறுங்கள்!

குணச் சிறப்புக்களையும் கூறுங்கள்!
வணக்கத்துக்குரிய தலங்கள் எவை?”என

“ப்ரக்ருதிகள் ஆவர் ஐந்து சக்திகள்
கூற இயலாத பெருமைகள் கொண்டு.

கூறுவேன் என்னால் இயன்ற அளவுக்கு
கூற இயலாத சக்தியரின் பெருமையை.

‘ப்ர’ இது எழுச்சி, ‘க்ருதி’ இது சிருஷ்டி;
‘ப்ரக்ருதி’ ஆகும் ‘சிருஷ்டியின் எழுச்சி’!

சிருஷ்டியால் மனவெழுச்சி எனலாம்
சிருஷ்டியின் எழுச்சி என்று கூறலாம்.

‘ப்ர’ ஸத்துவம், ‘க்ரு’ ராஜசம், ‘தி’ தாமசம்;
‘ப்ர’ ஆதி; சிருஷ்டிக்கு முந்தியது எனலாம்!”

உலகம் உய்ய வேண்டும் ! விசாலம். K. ராமன்

9#1a. Pancha Prakrutis

NArAyaNan told NArada, “These are the Pancha Prakrutis we worship namely DurgA Devi, RAdhA Devi, Lakshmi Devi, Saraswati Devi and SAvitri Devi.”

NArada asked NArAyaNan,”Please tell me who these five Devis are, define their qualities, who has created them, how they got these names, what is their real greatness, what is their history, how to worship them and the holy places devoted to them, in great detail.”

NArAyaNan replied,”Pancha Prakrutis are the Five Devis. It is impossible to relate their greatness in full. I will expatiate on it to the best capacity of my capacity.

(Pra + kruti) means the (‘rise of’ + ‘srushti’). It can also mean the Power that existed prior to srushti. ‘Pra’ is SAtvic in nature, ‘kru’ is RAjasic in nature and ‘ti’ is TAmasic in nature.”