9#2d. வைஷ்ணவ சித்தாந்தம்

வெண்ணிலாவை நோக்கும் சகோரப் பறவை எனக்
கண்டாள் ஸ்ரீ கிருஷ்ணமூர்த்தியின் திருமுகத்தை!

விளங்கியது நெற்றியின் நடுவில் சந்தனத் திலகம்;
துலங்கியது அதன் நடுவில் குங்குமம், கஸ்தூரி.

வளைந்த கூந்தலில் புரண்டன மலர் மாலைகள்;
விளைந்த முத்துக்கள், நவமணி அலங்கரித்தன.

பூரித்த உருவத்தினால் பதிக்கு இனியவள் – தோற்று
ஓரம் போகும் யானையும், அன்னமும் நடையழகில்!

சிருங்கார ரசமே உருவாகி வந்த ஒரு பெண் அவள்;
சிருஷ்டித் தொழிலுக்கு தலைவர் கிருஷ்ணமூர்த்தி!

சிருஷ்டியை விரும்பிச் செய்தார் தேவியோடு சம்போகம்
சிருஷ்டி ஸ்தானத்தில் பிரமனின் ஒரு நாள் பொழுதளவு.

சிரமம் அடைந்தார் தொடர்ந்த சம்போகத்தால் – ஒரு
சுப வேளையில் வெளிப்பட்டது தேவியிடம் அவர் வீர்யம்!

சிரமப்பட்டாள் தேவியும் அந்த வீரியத்தின் தேஜசால்;
சிரமத்தால் வெளிவந்தன பெரு மூச்சும், வியர்வையும்.

கிரகித்துக் கொண்டது பெருகிய வியர்வையை பூவுலகு;
பரவிய பெருமூச்சு ஆனது பிராணிகள் ஜீவிக்க ஆதாரம்.

உற்பத்தியானாள் பத்தினி வாயுவின் இடப்புறத்தில்;
உற்பத்தியாயினர் ஐந்து புத்திரர்கள் அவளிடமிருந்து.

பஞ்சப் பிராணன்கள் என்ற பெயர் பெற்றனர் ஐவரும்,
பிராண, அபான, வியான, உதான, சமான வாயுக்கள்.

உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K. ராமன்

9#2d. The Pancha prANAs

His Devi’s eyes began to drink with joy the moon beams from the face of Sri KrishnA just as the mythical Chakora bird does. On Her forehead there was the mark of red vermillion; over that was the dot of white sandal paste and over that was placed the dot of musk.

Her wavy hair was decorated with MAlati garlands. Her neck was decorated with gem studded ornaments and jewels. She was always amorous towards Her husband.
Her face looked as if ten million moons had risen all at once! Her gait humiliated those of a swan and an elephant.

Krishna and Prakruti Devi indulged in prolonged amorous sports so that Brahma’s one celestial day passed away in that sport. The Father of the Universe, then became tired and impregnated her in an auspicious moment.

Devi was also very tired and began to perspire and breathe very heavily. Her perspiration turned into water and flooded the whole universe! Her breath turned into air and became the life of all beings.

The female that sprung from the left side of VAyu became his wife and out of their contact were born their five sons called as Pancha prAnAs. They were named as PrANa, ApAna,SamAna, UdAna and VyAna.

These five sons of VAyu are the five vital VAyus of all the living beings.