9#7b. விஷ்ணுவும், லக்ஷ்மியும்

விஷ்ணுபிரான் கூறினார் லக்ஷ்மி தேவியிடம்,
“விருப்பமும் நிறைவேறும், வாக்கும் தவறாது!

ஒரு கலையினால் நதியாவாள் சரஸ்வதி தேவி!
பிற கலைகளால் அடைவாள் பிரமனை, என்னை!

அடைவாள் பூமியை பகீரதியாக கங்கை – பின்பு
தடையின்றிச் சேருவாள் சிவனை, என்னை!

உருவெடுப்பாய் நீ பாரதத்தில் உன் கலைகளால்
பெருகும் பத்மாவதி நதியாக, துளசிச் செடியாக!

கழிய வேண்டும் ஐயாயிரம் ஆண்டுகள் பிறகு
கலியுகத்தில் என்னிடம் வந்து சேருவதற்கு.

உண்டாகும் நதிகளுக்குப் பாவம் பாவிகளால்!
துண்டாடும் அதை நீராடும் பக்தர்கள் ஸ்பசரிம்.

மந்திரங்களை உச்சரிக்கும் பக்தர்களின் ஸ்பரிசம்
விந்தையாக அழித்து விடும் பாவக் குவியலை!

புனிதத் தலம் என் பக்தர்கள் வாழும் இடம்,
புனிதம் அடையும் அவர்கள் தொழும் நதிகள்.

எத்தகைய பாவம் செய்தவனும் தொலைப்பான்
மொத்தமாக அத்தனையும் பக்தன் தரிசனத்தால்!”என

“எந்த பக்தரைத் தரிசித்தால் பாவனம் அடைவோம்?
எந்த பக்தரின் பாதத் தூளி பாவனம் அடைவிக்கும்?

அடையாளம் காண்பது எப்படி அந்த உத்தமரை?
அடைவது எப்படிப் பாவனம் ?” என்றாள் லக்ஷ்மி

உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K. ராமன்

9#7b. Lakshmi and VishNu

Sri Hari told Lakshmi, “I will keep my own word and I will also act as you have suggested. Let Saraswati go with one of her amsams to form the river. Let her go to Brahma with one half of her glory and remain with me here in Vaikuntham with her full glory.

GangA will have to go with one of her amsams to BhArata Varsha – to form a river and purify the three worlds. She will be assisted eagerly by Bhagiratha. She can remain in one of her amsams on the matted hair of Chandra S’ekhara. And she can remain with me here in Vaikuntham in her full glory.

O Lakshmi! You can become the PadmAvati river and the Tulasi tree. After five thousand years of Kali Yuga, your curse will expire. Again you all will come to My abode.

Saints who worship my mantra will perform their ablutions in your water. They will free you by their holy touch and sight from all the sins accumulated by washing the sinners. It is the ‘Darshan’ and the ‘Sparshan’ of my devotees that make all the places of pilgrimage holy.”

Lakshmi asked now,” What are the characteristics of your Bhaktas whose sight and touch destroy instantly the five great sins (pancha mahA pAtakAs)?”

The Lord smiled and began to speak about the secret marks of the great BhaktAs.