9#20a. சிவன் தூது

உறுதியாக நம்பினான் பிரமன் விஷ்ணு கூறியவற்றை;
கருதினான் பரமசிவனைத் தியானத்தில் பூவுலகு சென்று.

அமர்ந்தான் ஓரால மரத்தின் அடியில் தேவர்களுடன்
அழகிய சந்திரபாகா நதிக் கரையில் உடனே சென்று.

சந்திர சூடன் காட்சி தந்தான் பிரம்ம தேவனுக்கு;
“சங்க சூடனை அழிக்க வேண்டும் எவ்வாறேனும்!”

பிரார்த்தித்தான் பிரமன் தேவர்களுடன் சிவனை;
பிரம்ம லோகம் திரும்பினான் விண்ணப்பித்த பின்.

சங்க சூடன் தலை நகருக்கு அனுப்பினான் தூதாக,
சந்திர சூடன் கந்தர்வன் புஷ்ப தந்தனை அழைத்து!

ஜொலித்தது தலைநகர் சுவர்க்கத்தினும் மேலாக;
ஜொலித்தது அரண்மனை ரத்தினங்கள் இழைத்து.

நான்கு அகழிகள் பாதுகாத்தன நகரை – முன்
நான்கு வாயில்களிலும் பலத்த கட்டுக் காவல்!

பிங்கலாக்ஷன் காவல் செய்தான் சூலத்துடன்;
தங்கு தடையின்றி அனுமதித்தான் தூதுவனை.

“சிவன் தூதன் நான் கந்தர்வன் புஷ்ப தந்தன்!
சிவன் கூறிய தூது மொழியைக் கேள் மன்னா!

திருப்பித் தந்துவிடு தேவர்களின் உலகத்தை!
திருப்பித் தந்துவிடு தேவர்களின் செல்வத்தை!

மறுத்தால் வா எங்களுடன் போர் புரிவதற்கு;
இருக்கிறார் சிவன் சந்திரபாகா நதிக்கரையில்!

மறுமொழி என்னவோ கூறுவாய் என்னிடம்!” என
சிரித்தான் சங்க சூடன் “வருவேன் நாளை நானே!”

குழுமினர் சிவகணங்களின் தலைவர்கள்;
குழுமினர் அஷ்டபைரவர், ஏகாதச ருத்திரர்;

குழுமினர் அஷ்ட வசுக்கள், துவாதச ஆதித்யர்;
குழுமினர் கூஷ்மாண்டர், யக்ஷர், வேதாளங்கள்.

அந்தப்புரம் சென்றான் துளசியிடம் சங்க சூடன்;
அறிவித்தான் தூது மொழிகள், போரைக் குறித்து.

“கெட்ட கனவு கண்டேன் விடியற் காலையில்;
கெட்ட செய்தி கேட்டேன்!” துளசி அழுதாள்!

உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K. ராமன்

9#20a. SivA’s messenger

Brahma entrusted the task of killing Chandra Choodan to Lord Siva aka Chandra Choodan and went back to his abode. So did all the other Devas. Now Siva sent Pushpa Dantan – a Gandharva – as his messenger to Sankha Choodan’s capital city.

The capital city was more prosperous than AmarAvathi or ALagApuri. The palace was studded with precious gems everywhere. Multiple trenches protected the city. The twelve main gates were well protected by vigilant guards.

PingalAkshan guarded eagle eyed with his SoolAyudam. But he allowed the Pushpa Dantan the messenger from Siva to enter the palace freely.

Puspa Dantan was duly impressed by the rich spectacles that met his eyes. He was amazed to see the grandeur and prosperity of Sankha Choodan.

He introduced himself and conveyed the message sent by Siva,”Return to Devas all the things and privileges they used to enjoy before. Let them live as before without any further hindrance.

If you will not agree to do this, come to the war front. Lord Siva is waiting on the bank of the river ChandabAga. Tell me your reply to be conveyed to our Lord”

Sankha Choodan laughed and said, “I shall come there tomorrow morning. Now you can go back to your Lord and master an convey my message!”

The leaders of Siva gaNAs assembled. Ashta BahiravAs, EkAdas RudrAs, Asta Vasus, DwAdasa AdithyAs, KooshmANdAs, Yakshas and VetAls all assembled in readiness for the imminent war.

Sankha Choodan went to the quarters of Tulasee and told her of the happenings of the day. She said to him,”I had a very scary dream early in the morning. Now I have heard the bad news also from you!” Tulasee started weeping uncontrollably.