9#3c. சிருஷ்டி (3)

“அசையாத பக்தி அருள்வீர் எனக்குத் தந்தையே
இசைவான உம் மலரடிகள் மீது என்றென்றும்!

பக்தியுள்ளவன் வாழ்வான் ஜீவன் முக்தனாக!
பக்தியற்றவன் வாழ்வான் நடைப்பிணமாக!

பயன் தராது பக்தி இல்லாத ஒருவனுக்கு
தியானம். தவம், ஜபம், பூஜைகள் எதுவும்.

விரதம், யாகம், யக்ஞம் மற்றும் சிறந்த
தீர்த்த யாத்திரைகள் க்ஷேத்திராடனங்கள்!”

அருளினார் விராட் புருஷனுக்கு மகிழ்வுடன்
கிருஷ்ணமூர்த்தி பற்பல மேன்மைகளையும்.

“எண்ணற்ற காலம் வாழ்வாய் என் போலவே!
எண்ணற்ற பிரம்மாக்களுக்குப் பிரபுவாக இரு!.

பிரமன் தோன்றுவான் உன்னிடமிருந்து;
பிரமன் படைப்பான் பல பிரபஞ்சங்களை.

ருத்திரர்கள் தோன்றுவர் பிரமன் நெற்றியில்;
ருத்திரர்கள் பதினொருவர் ஆவர் சிவரூபிகள்.

சங்கரிப்பார் பிரபஞ்சங்களை காலாக்னி ருத்திரர்;
அவதரிப்பார் காக்கும் கடவுள் எந்தன் அம்சமாக!

மறவாதே என்னை, உன் அன்னையை என்றும்!
குறையாது உன் பெருமை மேன்மைகள் என்றும்!”

உலகம் உய்ய வேண்டும்! விசாலம் . K. ராமன்

9#3C. The SRUSHTI (3)

VirAt Purusha said to Sri KrishNa, “I have got no desires whatsoever dear father! Please grant me pure and undiminished Bhakti towards your lotus feet.

In this world your bhakta is the Jeevanmukta – one who is liberated whilst living! He who is devoid of Bhakti to you is dead while living.

What is the use of the Japam, asceticism, sacrifice, worship, vrata, fasting, going to sacred places of pilgrimages and other virtuous acts if one does not have any bhakti towards Sri Krishna?

Vain is his life who is devoid of any devotion to you dear father, under Whose Grace he has obtained his life and whom he does not now pay homage to and worship.”

“O dear Child! May you remain as fresh as ever like I do. You will not have any fall even if innumerable Brahmas pass away. May you divide yourself into smaller parts and turn into smaller VirAts one for every universe. Brahma will spring from your navel and will create the cosmos.

From the forehead of Brahma will spring eleven Rudras for the destruction of this creation. But they will all be parts of S’iva. The Rudra named KAlAgni, of these eleven Rudras, will be the destroyer of all this Vis’vas (cosmos).

Besides Brahma, from each of your sub-divisions, A VishNu will emerge as the God who protects creation. He will be my amsam.

You will always be full of Bhakti towards Me and no sooner you meditate on Me, you will be able to see My lovely form. Remember me and your mother. Your greatness will never diminish on any accord!”Sri krishNa blessed his child the ViRat Purusha and went back to Goloka.