9#4a. சரஸ்வதி தேவி (1)

“எந்த சக்தியின் பூஜைகள் நடக்கின்றன?
எந்த சக்தி துதிக்கப் படுகிறாள் உலகில்?

என்னென்ன வரங்கள் வழங்கப் பட்டன?
எவை பக்தர்களின் சரிதங்கள் கூறுவீர்!”

நாரணன் வினவினான் நாராயணனிடம்,
நாரதனுக்கு விளக்கினான் நாராயணன்.

“பரப்ரும்ம வடிவானவர் கிருஷ்ணமூர்த்தி;
பத்தினி ஆவாள் ஸ்ரீ ராதாதேவி அவருக்கு.

பிரத்தியக்ஷம் ஆனாள் சரஸ்வதி தேவி
பிரிய பத்தினி ராதாதேவி முகத்திலிருந்து.

விரும்பினாள் தோன்றினவுடனே – சரஸ்வதி
கிருஷ்ணமூர்த்தியைக் கணவனாக அடைய.

அனைத்தும் அறிவார் கிருஷ்ணமூர்த்தி – அவள்
நினைத்ததையும் அறிந்து கொண்டார் சடுதியில்.

“உள்ளான் ஸ்ரீமன் நாராயணன் என் அம்ச பூதமாக!
உள்ளான் அழகு, இளமை, நற்குணங்கள் பொருந்தி!

சமம் ஆவான் அவன் தேஜஸில், சக்தியில் எனக்கு!
சமம் ஆவான் எழிலில் ஒரு கோடி மன்மதர்களுக்கு!

தனியன் அல்லன் நான்; உள்ளேன் என் ராதையுடன்!
இனியவள்! என் பிராணனுக்கு அதிஷ்டான தேவதை!

அடக்க முடியும் என்னால் எல்லோரையும் – ஆனால்
அடக்க முடியாது என்னால் என் ராதையை மட்டும்!

லக்ஷ்மி உள்ளாள் நாராயணனிடம் – எனினும்
லக்ஷ்மி உள்ளம் நிறைந்தவள் நற்பண்புகளால்!”

உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K. ராமன்

9#4a. Saraswati Devi(1)

NArada asked NArAyaNan,” Which Devis are being worshiped in the world? What were the boons given by them ? Who were their bhaktAs who benefited by their boons? Please tell me all these in great detail.”

“The amorous Devi Saraswati sprang from the end of the lips of RAdhA Devi. As soon as she appeared, she desired to marry Sri KrishNamoorthi Himself. Sri KrishNamoorthi who could read people’s minds knew it instantly and addressed Her thus:

“O Chaste Devi! NArAyaNa is born from My amsam; He is young. He is good looking with attractive features. He is endowed with all my qualifications. He is very much like Me.

He knows the amorous sentiments of women and He fulfills their desires. Ten million Cupids are present in him.

If you desire to marry and remain with Me, that will not be do any good to you. Since RAdhA is with Me and She is more powerful than you. If a man be stronger than another, he can rescue one who takes his shelter. But if he himself is weaker, how can he protect his dependent from others?

Though I am the Lord of all and I can rule over everyone else, I cannot control RAdhA Devi. She is equal to me in power, in her beauty and in merits. She is equal to Me in every respect.

Again it will be impossible for Me to leave her since She is the presiding Deity of My life. How can anyone relinquish his own life?

Please go to NArAyaNa in Vaikuntha. You will get your desires fulfilled there. You will get for your husband the Lord of Vaikuntha and you will live in peace and happiness.

Lakshmi Devi is residing there. Like you she is also not under the control of lust, anger, greed, delusion and vanity. She is equal to you in her beauty, her qualities and her power. So you will live with her in great delight. You both will be loved and treated equally by the Lord of Vaikuntha.”