9#5b. சரஸ்வதி துதி (2)

“சாங்க்யா ரூபிணியாக உலவுகிறாய் கணிதத்தில்!
சந்தேகத்தைப் போக்கும் சித்தாந்த வடிவினள் நீ!

நினைவாற்றலும் நீயே! அறிவாற்றலும் நீயே!
ஞான சக்தியும் நீயே! கற்பனா சக்தியும் நீயே!

மோனம் சாதித்தான் பிரமன் சொல்லும் வன்மையின்றி!
ஞானத்தின் உட்பொருளை சனத்குமாரர் வினவியபோது!

துதித்தான் உன்னைக் கிருஷ்ணனின் கிருபையினால்;
போதித்தான் – சொல்லும் வன்மையை நீ அருளியபின்.

பூமகள் கேட்டாள் அனந்தனிடம் ஞானம் பற்றி;
பூமகளுக்குக் கூற இயலவில்லை அனந்தனால்!

கசியபரை அடைந்தான் அஞ்சிய அனந்தன் – உன்னைத்
துதித்த பின்னர் இயற்றினான் ஓர் அரிய சித்தாந்தம்.

வியாசர் கேட்டார் வால்மீகியிடம் ஓர் ஐயத்தை;
விரும்பினார் வியாசர் புராண சூத்திரத்தை அறிய.

பேசாமல் மௌனமாகிவிட்டார் முதலில் வால்மீகி;
போதித்தார் சித்தாந்தத்தை உன் அருள் பெற்ற பின்.

தியானித்தார் கலைமகள் உன்னைப் புஷ்கரத் தீவில்
வியாச முனிவர் நூறாண்டு காலம் இதற்குப் பின்னர்.

வரப் பிரசாதம் அளித்தாய் நீ வியாச முனிவருக்கு!
வல்லமை தந்தாய் வேதம் திரட்ட, புராணம் இயற்ற!”

உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K. ராமன்

9#5b. Saraswati Devi Stuti (2)

“Without you existing as the numbers, no mathematician can count anything. You help us to arrive at definite conclusions known as SiddhAntas. You remove all the doubts of everyone. My obeisance to you!

You are the memory power! You are the true knowledge! You are the power of sharp intelligence! You are the power of imagination! So I bow down to you again and again.

When Sanat kumAra asked Brahma for a solution, Brahma was unable to solve the problem and remained speechless like a dumb person.

Sri. Krishna advised Brahma to praise and sing hymns to you – the Goddess of speech – to get his desires fulfilled. Then the four-faced Brahma did as advised by the Lord. He praised you Devi Saraswati and by your grace, arrived at a very nice SiddhAnta and conclusion.

One day the goddess Earth asked a doubt to Ananta Deva. He was unable to answer her and remained silent like a dumb person. He became afraid and went to sage Kashyapa. Then he praised you as advised by Kashyapa. Then he could clear the doubts of Goddess earth and came to a definite conclusion.

Veda VyAsa once went to VAlmeeki and asked him about some Sootras of the PurANAs. Muni VAlmeeki got so confused that he could not reply to VyAsa. Then VAlmeeki remembered you, the Mother of the world. He was able to answer the question after attaining your grace.

VyAsa himself got his power of intellect and perseverance required to compile and classify the four vedas and to compose the eighteen PurANas after praising your glory in the Pushkara dweepa for one hundred long years!”