9#29a. வரங்கள்

யமன் கூறினான் புன்னகை முகத்துடன்
நிழல் போல் தொடர்ந்த சாவித்திரியிடம்.

“அஸ்வபதியின் தவப்பயன் நீ பெண்ணே!
சாவித்திரி தேவி தந்த வரத்தின் பயன் நீ!

பன்னிரெண்டு வயதுப் பெண் ஆன போதும்
பரம ஞானியைப் போலப் பேசுகின்றாய் நீ!

விஷ்ணுவுடன் லக்ஷ்மி போல இருப்பாய்!
சிவனுடன் உமை போல இருப்பாய் நீயும்!

சௌபாக்கியவதியாக ஜீவிப்பாய் நீ
சௌக்கியமாக அன்புக் கணவனோடு!

கேள் இன்னமும் உனக்கு வேண்டியவற்றை!”
கேட்டாள் சாவித்திரி மேலும் பல வரங்களை!

“வேண்டும் எனக்கு ஒளரச புத்திரர் நூற்றுவர்;
வேண்டும் என் தந்தைக்கு சத் புத்திரர் நூற்றுவர்.

வேண்டும் பார்வை கண் இழந்த மாமனாருக்கு!
வேண்டும் மீண்டும் ராஜ்ய போகம் மாமனாருக்கு!

வாழ வேண்டும் லக்ஷம் ஆண்டுகள் கணவனோடு
வாழ்ந்த பின் வேண்டும் இருவருக்கும் பரமபதம்!”

“தந்தேன் நீ கேட்ட வரங்களை எல்லாம் – மேலும்
தந்தேன் நீ கேளாத உன் மன விருப்பங்களையும்!”

“கர்ம பேதங்கள் தோன்றும் வகை எது – மேலும்
கர்மம் செய்பவர் யார்? அனுபவிப்பவர் யார்?”

இறைவன் உலகினைப் பரிபாலிப்பது எப்படி?
அறிய விரும்புகின்றேன் இந்த விஷயங்களை!”

உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K. ராமன்

9#29a. Boons and Wishes

Yama Dharma told SAvitri who was following him like a shadow,” You are the daughter born out of the penance done by Aswapati and the boon given by SAvitri Devi. No wonder you talk so well like a mature JnAni-even though you are just twelve years old!

May you live happily with your dear husband like Lakshmi Devi does with Vishnu and Uma Devi does with Siva. You can ask for any boons you wish for dear child!”

SAvitri asked for several boons.” I want one hundred sons. I want one hundred sons to be born to my father. I want my father in law’s eye sight restored. He should become the ruler of his lost kingdom.

I want to live with my husband happily for one hundred thousand years. After that both of us should reach the highest abode of liberation.”

Yama said,”I give you all that you have asked for and even those for which you wish though you have not asked for them.”

SAvitri asked a few more questions now.”What creates the difference in the karmAs performed? Who performs the karmAs? Who undergoes the effects of karmAs? How does God rule the world? I want to know all these things!”