9#22b. யுத்தம் (2)

சிதறியோடும் அமரர்களைக் கண்டு – பெரும்
சினம் கொண்டார் திரு முருகப் பெருமான்.

சிவ கணங்களுக்கு அளித்தார் அபயம்;
சிவ கணங்ளுக்கு அளித்தார் ஊக்கம்.

தனி ஒருவராகப் போர் செய்து கொன்றார்
கணத்தில் நூறு அக்ஷௌஹிணி சேனையை!

தின்றாள் பத்ரகாளி கரிகளை அறைந்து கொன்று!
திரிந்தாள் களமெங்கும் ராக்ஷசரின் உதிரம் அருந்தி!

ஒடி ஒளிந்தனர் கந்தன் விடுத்த பாணங்களால்!
ஓடி ஒளிந்தனர் கந்தன் கை வேலாயுதத்துக்கு!

பெய்தான் சங்கசூடன் சரமாரியை விண்ணிலிருந்து;
எய்தான் சங்கசூடன் அவற்றைத் தடுக்க இயலாதபடி.

மரங்கள், மலைகள், அம்புகள், பாம்புகள் முருகனை
மறைத்தன பனியால் மூடிய செங்கதிரவனைப் போல!

உடைத்தான் முருகனின் தேரை, அறுத்தான் கை வில்லை!
தடுத்தான் வேலை, அலைக் கழித்தான் கந்தன் மயிலை!

அறுத்து எறிந்தான் முருகன் அவை அனைத்தையும்;
எறிந்தான் தன் சக்தி ஆயுதத்தைச் சங்கசூடன் மீது!

மயங்கி விழுந்தான்; பின் தெளிந்து எழுந்த அவன்
ஏவினான் சக்தி ஆயுதத்தைக் கந்தன் மார்பினில்!

தாவி ஓடிவந்த காளி அணைத்துக் காத்தாள்;
ஏவிய சக்தி தாக்கவில்லை கந்த பெருமானை!

உடன் இருந்து போர் செய்தாள் காளி தேவி;
உதவின போரினில் மோகினிப் பரகணங்கள்.

பொழிந்தாள் பிரளயாக்னியைக் காளி தேவி!
அழித்தான் மேகாஸ்திரத்தினால் சங்கசூடன்!

எறிந்தாள் காளி வருணாஸ்திரத்தை;
எறிந்தான் சங்கசூடன் கந்தர்வாஸ்த்திரத்தை!

உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K. ராமன்

9#22b. The war (2)

Skanda became angry seeing the Devas running in confusion in the battle field. He gave Abhayam to the frightened army and fought with the asura army single-handedly. He killed one hundred akshouhiNi of the asura army in just a moment.

Bhadra KAli killed and swallowed the elephants. She went around the battle field drinking the blood of asuras. Now it was the asuras’ turn to run in confusion and hide from the Shakti Aayudam of Skanda.

Sankha Choodan rained arrows from the sky. They came so fast that they were unstoppable even for Skanda. Trees, Moutains, arrows and snakes covered Skanda like the dense mist covering the morning sun.

Sankha Choodan shattered the chariot of Skanda, cut off his bow, stopped his Shakti Ayudam and gave a hard time to his vAhanam the peacock.

Skanda cut off all these and aimed and threw his Shakti on Sankha Choodan. He fainted hit by Skanda’s Shakti Aayudam but regained consciousness fast and threw his own Shakti Aayudam back on Skanda.

Bhadra KAli rushed in and saved Skanda for being attacked. She fought the asura army side by side with Skanda. The Mohini Para GaNas also helped her in the war.

KALi rained praLayAgni on Sankka Chooda and he put it off with his MeghAsthram. KALi shot at him her VaruNAsthram and Sankhachood shot his GandhavAsthram.