9#18d. பரீட்சை

மகிழ்ந்தாள் துளசி இதைக் கேட்ட பிறகு!
‘மங்கையர் விரும்பும் வாலிபன் இவனே!’

“பரீட்சை செய்தேன் உம்மை அறிந்து கொள்ள;
பரீட்சித்த பின் வரிக்க வேண்டும் கணவனாக!

வரண்டவன், வயோதிகன், குணமிலி,
அறிவிலி, தரித்திரன், மூர்க்கன் மேலும்

குஷ்டன், வியாதியஸ்தன், கோபக்காரன்,
துஷ்டப்பயல், துர்முகன், நொண்டி மற்றும்

அங்கஹீனன், குருடன், செவிடன்,
அசடன், கசடன், ஊமையன் மேலும்

ஆண்மையற்றவன், நம்புசகன், பாவிக்குப்
பெண்ணைத் தருபவன் செய்கிறான் பாவம்!

கண்ணைக் கட்டிக் கடலில் தள்ளும் தந்தை
மண்ணில் அடைவான் பிரம்மஹத்தி தோஷம்!

பத்து யாகப் பலன் அடைவான் – பெண்ணைப்
படித்த நல்ல குணசாலிக்கு அளிக்கும் தந்தை!”எனத்

தோன்றினான் பிரமன் அவர்கள் முன்பு!
“வீண் வார்த்தைகள் எதற்கு சங்கசூடா?

ஆடவர்களில் சிறந்தவன் நீ சங்கசூடா!
மாதர்களில் சிறந்தவள் துளசி ஆவாள்!

சமர்த்தன் ஆகிய ஆண்மகன் கூட வேண்டும்
சமர்த்தை ஆகிய ஒரு பெண்ணுடன் மட்டுமே!

பதிவிரதையே! பரீட்சை செய்வது எதற்கு?
சதி, பதியாக இனிது வாழ்வீர் இனியேனும்!

அடைவாய் நீ கோலோகம் சென்று கிருஷ்ணனை!
அடைவான் சங்கசூடன் வைகுண்ட நாராயணனை!”

உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K. ராமன்

9#18d. The acid test!

“I tested you to ascertain your strength in learning. It is highly advisable to choose one’s husband after examining his merits and defects.

The sin committed by a father is equivalent to the murder of a BrAhmin – when he gives away his daughter to a man who is not worthy of her who may fall into one of the following categories.

A man devoid of all the necessary qualifications, a very old man, a man who is completely ignorant, a man who is very poor, a man who is an illiterate, a man afflicted with severe diseases, an ugly man, a short tempered man, a man very harsh in all his dealings, a lame man, a man who lacks limbs and organs, a deaf man, a dumb man and a man who is impotent.

If a father gives in marriage his daughter to a young man of good character, who is well learned, well qualified and of a peaceful temper, then the father acquires the same fruits as by performing ten ashamed yAgam (horse sacrifice).”

Now Brahma appeared in front of them and said,”Why are you both still wasting time in such useless and idle talk. Sanka ChoodA! You are a gem among men and Tulasee, You are a gem among women!

The man and his wife must be well matched in everything to lead a happy life. Get married in Gandharva style and start living as a man and his wife happily without any fear or worry.” Brahma advised them!