9#22c. யுத்தம் (3)

எய்தாள் காளி மஹேஸ்வர அஸ்திரத்தை;
எய்தான் சங்கசூடன் சதாசிவ அஸ்திரத்தை.

ஏவினாள் காளி வீரபத்திர அஸ்திரத்தை;
தாவியது வானில் சங்கசூடன் தொழுததும்.

அஸ்திரத்துக்கு அஸ்திரம் பதிலானது.
ஆயுதத்துக்கு எதிர் ஆயுதம் பதிலானது.

பாசுபதாஸ்திரத்தை எடுத்தாள் காளி எய்வதற்கு!
“பத்தினியாகத் துளசி உள்ளவரை இல்லை மரணம்”.

ஒலித்தது அசரீதி விண்ணிலிருந்து மண் வரை;
ஒலித்தது, “அது பிரமன் தந்தவரம் இவனுக்கு!”

விழுங்க ஓடினாள் காளி சங்கசூடனை;
விழுங்க இயலாத பேருருவம் எடுத்தான்.

உடைத்தாள் தேரை; எறிந்தாள் சூலத்தை!
தடுத்தான் சூலாயுதத்தை இடது கையால்!

மூர்சித்தான் காளி கொடுத்த அடியில்;
மூர்ச்சை தெளிந்து செய்தான் மல்யுத்தம்.

எய்யவில்லை பாணங்களை மாத்ரு பக்தியால்!
எய்யவில்லை பாணங்களைக் காளியும் கூட.

சுழற்றி வீசினாள் சங்கசூடனை விண்ணில்!
சுழன்று வணங்கிவிட்டு விமானம் ஏறினான்!

காளி கூறினாள் சிவபெருமானிடம் சென்று,
“வாயிலிருந்து நழுவிய அசுரர் மிகுந்தனர்!”

அசரீரி தடுத்தது காளியின் பாசுபதாஸ்திரத்தை!
அசல் ஞானி அவனும் எய்யவில்லை பாணம்!

உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K. ராமன்

9#22c. The war (3)

Kali shot her MahEswara asthram on Sankhachooda. He shot his SadAsiva asthram on her. Now KAli shot the MahA Veerabhadra asthram. It went away into the sky – the moment Sankha Choodan paid obeisance to it.

Every asthram released by KAli was met by a suitable asthram by Sankha Choodan. Every weapon used by her met its match released from his hands.

KAli took out her PAsupthAsthram and then an asareeri was heard “As long as Tulasee remains a pativrata, Sankha Choodan will not fall. It is the boon given to him by Brahma Devan”

KAli wanted swallow him whole and ran towards him. Sankha Choodan assumed a form too huge to be swallowed by her.

KAli broke his chariot and threw her SoolAyudam on Sankha Choodan. He stopped it with his left hand. She beat him and he fainted right away. When he came round, he started wrestling with KAli.

Neither KAli nor Sankha Choodan shot any more asthrams on each other. KAli threw him high up. He landed safely, did a namaskAr to her and got into his vimAnam.

KAli went back and told Lord SivA, “Only those asurAs who had slipped from my mouth have survived in the battle today.”

An asareeri stopped KAli from shooting PAsupatAstram and Sankha Choodan being a true JnAni did not shoot any asthram at her.