9#6b. சாபங்களும், தாபங்களும்

தரவில்லை எதிர்சாபம் லக்ஷ்மி சரஸ்வதிக்கு!
தந்தாள் சாபம் சினந்த கங்கை சரஸ்வதிக்கு!

“நதி வடிவம் பெறட்டும் இந்த சரஸ்வதியும்!
நலிவடையட்டும் பாவங்களின் சுமையால்!”

“நீயும் அடைவாய் நதி வடிவம் கங்கையையே!
நீயும் கெடுவாய் பாவங்களைக் கழுவியதால்!”

சரஸ்வதி சபித்துவிட்டாள் கங்கையையும் கூட,
ஒரேபோல மூவருக்கும் கிடைக்கும் நதி வடிவம்!

பரிசாரகர்கள் சூழத் திரும்பி வந்தார் பரமாத்மா.
பரிவுடன் கூறினார் அறிவுரைகள் சரஸ்வதிக்கு!

அறிந்து கொண்டார் சச்சரவு சாபங்களைப் பற்றி.
அறிவுறுத்தினார் லக்ஷ்மிக்கு முதலில் இதனை!

“அவதரிப்பாய் தர்மத்வஜரின் மகளாக பூமியில்;
அனுபவிக்காமல் கர்ப்பவாசம் – கலையம்சமாக.

அவதரிப்பான் சங்கசூடன் என் அம்சமாக – வந்து
அடைவாய் என்னை அவன் நாயகியாக வாழ்ந்த பின்னர்!

பொய்க்கலாகாது சரஸ்வதி தந்த சாபம் – எனவே
பெறுவாய் துளசிச் செடி, பத்மாவதி நதி வடிவை!”

கூறினார் பரமாத்மா கங்கையிடம் இதனை,
“பெறுவாய் நதி வடிவினை பூமியில் நீயும்!

பகீரதனால் அடைவாய் பாரத பூமியை – அங்கு
பாகீரதியாகி நீக்குவாய் பாவிகள் பாவங்களை!

நாயகியாவாய் என் அம்சமான சமுத்திர ராஜனுக்கு!
நாயகியாவாய் என் அம்சமான சந்தனு ராஜனுக்கும்!”

உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K. ராமன்

9#6b. The quarrel and the curse!

Lakshmi did not become angry – even when she got cursed. She became sorry, held the hands of Saraswati and remained silent. But GangA became very angry and her lips began to quiver violently.

Seeing the mad fiery nature of angry Saraswati, she told Lakshmi, ” Just as she has cursed you to become a river, I too will curse her to be turned into a river! She will go to the world of men, the wicked sinners, and reap their heaps of sins when they bathe in her water.”

Hearing this curse of GangA, Saraswati cursed her back, “You too will descend into the world of mortal men as a river! You too will wash and collect all the sins of those wicked sinners.”

While this quarrel was going on, the four-armed omniscient BhagavAn Sri Hari came back there accompanied by four of his attendants who were also four-armed like himself. He embraced Saraswati Devi and began to speak on all the previous mysteries.

Then they came to know the cause of their quarrels and why they cursed one another and all of them became very sorry.

At that time BhagavAn Sri Hari told Lakshmi, ” May you be born out of your own amsam – without being confined in a womb – as the princess of Dharma-dhwaja.

S’ankhachoodA – the Indra of the Asuras – will be born out of my own amsam and will marry you. You will be named Tulasee, the purifier of the three worlds, in BhArata Varsha. Now go there quickly and become a river by your own amsam under the name PadmAvati”.

“O Ganga! You will also take incarnation in BhArata Varsha as a river. You will purify all the worlds and destroy all the sins of the inhabitants of BhArata.

Bhagiratha will take you down to the earth and you will be famous by the name BhAgirathee, the most sanctifying river in the whole world.

There the King Ocean born out of my amsam and King S’Antanu also born out of my amsam will become your husbands and marry you. After that life on earth, you will come back here and become my wife once again!”