9#21b. சிவன் அறிவுரை

மஹாதேவன் கூறினான் சங்கசூடனிடம்,
“மஹாப் புகழ் வாய்ந்த வம்சத்தவன் நீ!

பிரமன், மரீசி, கஸ்யபன், விப்ரஜித்து,
தம்பன் ஆவோர் உன் மூதாதையர்கள்.

திகழ்ந்தனர் தவம், சித்திகள் பெற்று!
திகழ்ந்தனர் செல்வச் செழிப்புப் பெற்று!

தேவர்களின் ராஜ்ஜியத்தில் எதற்காக ஈடுபாடு?
தேவர்களின் சொத்தில் ஏன் இத்தனை பிடிப்பு?

பிறர் சொத்தை விரும்புவது ஹிம்சை ஆகும்;
பிறர் சொத்தை விழைவது வறுமையைத் தரும்.

நிலையற்ற செல்வம் பெறுவதற்கு முயன்று
நிலையான புகழை இழக்கலாமா நீயே கூறு!

அதிகாரமும், செல்வமும் நிலைத்திருப்பதில்லை;
‘விதி’யையும் கூட விதி விடுவதில்லை அறிவாய்!

தவிப்பான் பிரம்மன் தன் தொழிலைச் செய்யாது!
தேவி வந்து உதவுவாள் பிரமன் மயக்கத்தை நீக்கி!

சந்திரன் வளர்வான், தேய்வான், மறைவான்!
கதிரவன் வெப்பமாவான் வானில் ஏறுகையில்!

தர்மம் கூடத் தேய்ந்து வருகிறது யுகம் தோறும்;
தர்மம் பரி பூரணமாக இருந்தது கிருத யுகத்தில்.

தர்மம் முக்கால் பங்கானது திரேதா யுகத்தில்;
தர்மம் அரைப் பங்கானது துவாபர யுகத்தில்;

கால் பங்காகிவிட்டது தர்மம் கலி யுகத்தில்;
கால பேதங்கள் பாதிப்பது இல்லை என்னை!

நிலையற்றவை இங்கு காணப்படும் பொருட்கள்!
நிலையாக இருப்பவன் நான் ஒருவன் மட்டுமே.

பிரம்மனால் சிருஷ்டியும், விஷ்ணுவால் ஸ்திதியும்
ருத்திரனால் லயமும் அடையமாட்டான் என் பக்தன்!

பக்தனை நெருங்க அஞ்சுவான் காலனும்!
அத்தகையவன் ஆக வேண்டும் நீயும் கூட!”

சங்க சூடன் வணங்கினான் சந்திர சூடனை!
சங்க சூடன் பதில் தந்தான் சந்திர சூடனுக்கு!

உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K. ராமன்

9#21b. MahAdEvA’s advice

MahAdEvA told Sankha choodan, “You belong to an illustrious lineage Sankha Chooda! Brahma, Mareechi, Kahsyapa, Viprajit, and Tamban are your ancestors. They had possessed many siddhis due to their power of penance performed by them. They all were very prosperous too!

I fail to see why you are interested in the kingdom of DevAs? Why do you show this interest in the wealth of the DevAs? It is himsa to covet the possessions of another person. The greed for the property of another person is the cause of poverty.

Wealth is transient and fortune is fickle minded. But fame and a good name are eternal. Do you want to lose your fame which is eternal for the sake of the wealth which is ephemeral?

Neither Power nor wealth are permanent even for Brahma. At times he would be in trouble unable to do his job of creation. At those times it is Devi who solves his problems and helps him to go on with The Creation.

Even the Moon waxes and wanes and disappears from view. The Sun becomes hotter as he ascends the sky. Dharma is undergoing changes from one yugam to the next yugam.

Dhrma was in its full glory in Krita yugam. It reduced to three fourth its glory in TretA yugam and to half its original glory in DwApara yugam. In Kaliyugam it has become just one fourth of what its glory was at first.

The only thing immutable by time is me. Time does not affect me in any way. My true bhakta will not be subjected to the Creation by Brahma, the Protection by Vishnu or the Destruction by Rudra. You to must become one such bhakta to me Sankha Choodan!”

Sankha Choodan prostrated to Lord Chandra Choodan and replied thus with great humility.