9#8a. வருங்கால நிலை(1)

பாரதி ஆனாள் சரஸ்வதி பாரதத்துக்கு வந்ததால்!
பிரம்மாணி ஆனாள் பிரம்மன் பத்தினியானதால்!

ஆனாள் வாணியாக வாக் தேவதையானதால்;
ஆனாள் சரஸ்வதியாக அக்னி வர்ணத்தினால்.

பாகீரதி ஆனாள் பகீரதன் கொணர்ந்த கங்கை;
பாகீரதியைத் தலையில் தாங்கினார் சிவன்.

பத்மாவதி நதியானாள் மஹாலக்ஷ்மி தேவி;
உத்தமர் தர்மத்வஜனின் மகளும் ஆனாள்.

தூய துளசி விருக்ஷமும் ஆனாள் லக்ஷ்மி.
தொடரும் இது ஐயாயிரம் ஆண்டுகளுக்கு!

அடைவர் வைகுண்டத்தை மீண்டும் சென்று
அடையும் நாசம் அத்தனை தீர்த்தங்களும்!

மிஞ்சும் பிருந்தாவனமும் காசியும் மட்டும்!
மிஞ்சாது எந்த விதமான சத் கர்மங்களும்!

மறைந்து விடும் வேத காரியங்கள் எல்லாம்;
மறைந்து விடும் தேவர், தெய்வ காரியங்கள்.

மறைந்து போய்விடும் புண்ணிய காரியங்கள்;
மறைந்து போய் விடும் விரதம், தவம், உபவாசம்;

வேடதாரிகள் ஆகிவிடுவர் ஆசார சீலர்கள்;
கோணல்வாதிகள் ஆகிவிடுவர் ஆசார சீலர்;

நடக்கும் பூஜைகள் துளசி இல்லாமல்!
நிறையும் உலகம் துஷ்ட முரடர்களால்!

பித்துப் பிடித்து அலைவர் அலங்காரத்தில்
சொத்தை ஆள்வர்; பெண்களிடம் வீழ்வர்!

மனம் போலச் செய்து கொள்வர் திருமணம்;
மனம் போல அனுபவிப்பர் பல பெண்களை.

உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K. ராமன்

9#8a. The Kali prabhAvam (1)

A part of Saraswati descended as a river in BhArata Varsha. So she is named as BhArati. She is called BrAhmi because she is dear to BrahmA. She is called VANI as She presides over Speech. The river Saraswati is a very sacred Teertha. She is like the burning fire to the fuel of sins, of sinners.

Through the curse of Saraswati, GangA also assumed the form of a river in her amsam. She was brought down to this earth at the request of Bhageerata. Hence she is called BhAgeerati.

While GangA rushed down to the earth S’iva broke her fall with the matted coils on His head – as requested by the Mother Earth.

Lakshmi came down to earth through the curse of Saraswati as the river PadmAvati in one of her amsams. But She remained in her full glory with Sri Hari. Lakshmi appeared also in Her other part as the well-known daughter Tulasee of the king Dharmadhvaja in India.

Last of all, she turned into the Tulasee tree, purifying the whole world. After remaining for five thousand years of Kali, all the three of them will quit being rivers and return to Sri Hari. All the Teerthas except KAsi and BindrAvan will go along with them to Vaikuntha.

At the end of ten thousand years of Kali, S’rAddhas, TarpaNas and all the rites and ceremonies dictated by the Vedas will cease. The worship of Gods, recitation of their praises and chanting their names will become extinct. The Vedas with their Angas will no longer be heard of.

All will be addicted to the VAmAchArA rituals. They will speak falsehood and be deceitful. Worship will be without the holy Tulasee leaves. Almost all will be deceitful, cruel, vain, egoistic, thievish and mischievous.

Men and women would enjoy carnal pleasures like animals. No fear will exist in marriage ties. Properties will belong to only those people who had made them and will not be passed on to one’s santhathis!