9#15b. தணிந்தது சினம்

அபயம் தந்தார் நாராயணன் சூரிய தேவனுக்கு,
“அபாயம் இல்லை உனக்கு சிவ சங்கரனாரால்!

வசப்படுவார் சிவசங்கரன் பக்தரின் பக்திக்கு;
வசிப்பார் சிவசங்கரன் பக்தரின் இருதயத்தில்.

உயிரினும் மேலானவர் சிவசங்கரன் எனக்கு!
உயரிய தெய்வம் உண்டோ சிவனாரை விட?

படைக்க வல்லவர் விளையாட்டாகவே சிவன்
படைப்புகளை எல்லாம் உள்ளம் விரும்பினால்.

மங்களகரம் நிரம்பியவர் சிவசங்கரன் – சர்வ
மங்களத்துக்கும் நிலைக்களன் ஆவார் அவர்!”

வினவினார் விஷ்ணு விரைந்து வந்த சிவனிடம்,
“விவரம் கூறுங்கள் இத்தனை சினம் எதற்காக?”

“சபித்து விட்டான் சூரியதேவன் என் பக்தனை!
சரியான பாடம் கற்பிக்கவே வந்துள்ளேன் நான்.

அழிக்க முடியும் அவன் சம்பத்தைச் சாபத்தால்!
அழிக்க முடியுமா அவன் பக்தியைச் சாபத்தால்?

செல்வத்தை வெறுப்பவர்கள் என் பக்தர்கள்;
செல்வத்தை விரும்பி விழைவது இல்லை!”

“மன்னிக்க வேண்டும் சூரியனின் பிழையை!
விண்ணுலகப் பேறு அடைந்தான் உம் பக்தன்

அரசாண்டு மடிந்தான் விருஷபத்வஜன்;
அரசாண்டு மடிந்தான் மகன் ரதத்வஜன்.

ஆசை கொண்டனர் அவன் இரு புதல்வர்கள்
குசத்வஜன், தர்மத்வஜன் செல்வம் பெற்றிட.

புரிந்தனர் தவம் லக்ஷ்மியைக் குறித்து;
அருள்வாள் லக்ஷ்மி புதல்வியாகப் பிறந்து!”

உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K. ராமன்

9#15b. SivA’s anger subsides!

Lord NArAyaNan gave abhayam or fearlessness to the Sun God. He said, “There is no danger to you from Lord Sivasankara. He is a devotee of his devotees. He lives in their hearts. He is dearer to me than my own life.

Is there any God greater than Siva? He can create the Universe as if it were a child’s play. He is the personification of all auspiciousness and bestows all auspiciousness on everyone. ”

Lord Siva reached there with his trident lifted in anger. Lord Vishnu asked him,” Why are you so angry ? Tell me all about it”

Siva replied to Vishnu, “The Sun God has cursed my dearest devotee. I want to teach him a good lesson today. He may curse and destroy the wealth of my sincere devotee! But can he destroy the devotion of my devotee by his curse? My sincere devotees do not care for material wealth. They do not desire or pray for worldly wealth.”

Lord NArAyaNan spoke thus: “PleaSe pardon the mistake committed by the Sun. Your devotee Vrishabadwajan has ruled well and reached your abode. Rathadwajan his son also has ruled well and reached your abode.

He has two sons Dharmadwajan and Kusadwajan. They both seek wealth and are praying to Lakshmi Devi. She will be born as the daughter of Kusadwajan and give them the wealth they so desire!”